செய்திகள்தொழில்நுட்பம்

“போச்சா! சோனமுத்தா!” அதிக நேர இன்ஸ்டா பயனருக்கு செக் : எடுபடுமா புதிய அப்டேட்!!

“போச்சா! சோனமுத்தா!” அதிக நேர இன்ஸ்டா பயனருக்கு செக் : எடுபடுமா புதிய அப்டேட்!!

உலகம் முழுவதும் அதிக பேர் மூழ்கி இருக்கும் முக்கியமான சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் பலரையும் அடிமையாக்கி உள்ளது.அந்த வகையில் பள்ளி மற்றும் இளம் பருவத்தில் இருக்கும் பலர் இந்த தளத்தில் அதிகமாக தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாக்குள் போய் ரீல்ஸ்க்குள் போய்விட்டால் அடுத்து அடுத்து என வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும்.ஆர்வத்தில் வீடியோவை பார்த்துக்கொண்டே கடிகாரத்தை பார்த்தால் திக்கென்று இருக்கும். வீடியோ ஓடுவதைப்போலவே நேரமும் ஓடி விடும். இதனைக் கட்டுப்படுத்த தற்போது இன்ஸ்டா நிறுவனமே அப்டேட் கொடுத்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராமிலேயே நீங்கள் அதிக நேரம் செலவிட்டால் உங்கள் பாப் அப் முறையில் நோட்டிபிகேஷன் வரும். 10 நிமிடம், 20 நிமிடம், 30 நிமிடம் என நமக்கான நேரத்தை நாம் செலக்ட் செய்து கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்களுக்கான நினைவூட்டல் வரும்.

இன்ஸ்டாகிராமில் இருந்தது போதும் மற்ற வேலைகளையும் பாருங்கள் என்பது போல இந்த நினைவூட்டல் அப்டேட்டை இன்ஸ்டா கொண்டு வந்துள்ளது.இது குறித்து தெரிவித்துள்ள, இன்ஸ்டாகிராம் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புத் தலைவர் வைஷ்ணவி ஜே, ‘தொடர்ந்து ஒரே டாப்பிக்கில் நீங்கள் 20 நிமிடத்துக்கு மேல் இருந்தால் உங்களை இன்ஸ்டா நினைவூட்டும்.

அது தேவையான ஒன்றுதான். அந்த நேரத்தில் நீங்கள் பல வேலைகளை செய்துகொண்டு இன்ஸ்டாவில் இடைவெளி விட்டு பயன்படுத்தினால் அது நீண்ட நேர பயன்பாட்டுக்குள் வராது என்றார்.இந்த அப்டேட்டை நவம்பரில் கொண்டு முதல் சோதிக்கத் தொடங்கியுள்ளது இன்ஸ்டாகிராம். இந்த அப்டேட் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும், அப்டேட்டுக்கு பிறகு எத்தனை சதவீதம் நபர்கள் இன்ஸ்டாகிராம் தொடர் பயன்பாட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்ற விவரத்தையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

சமீப அப்டேட்டின்படி, இன்ஸ்டாகிராம் இப்போது அடையாள சரிபார்ப்புக்காக வீடியோ செல்ஃபிகளைக் கேட்கத் தொடங்கியுள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பயனர் உண்மையான நபரா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள புதிய அடையாளச் சரிபார்ப்பு செயல்முறை Instagram-க்கு உதவும் என்பதை ஸ்கிரீன்ஷாட்கள் காட்டுகின்றன. உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்புவதற்கான ஒரு சிறிய வீடியோவை கேட்கும். இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மேலும் 30 நாட்களில் நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button