விவசாயிகளிடம் பணிந்த மத்திய அரசு : விவசாயி மீதான வழக்குகள் வாபஸ்…
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.
போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்த விவசாய சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தொடரும் நிலையில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.