
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையொட்டி காட்டுவனஞ்சூர் கிராம எல்லையில் நேற்று காலை புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.பேரூராட்சித் தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆஷாபீ, ஒன்றிய குழுத் தலைவர் திலகவதி நாகராஜன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளரான உதயசூரியன் MLA பூமிபூஜையை துவக்கிவைத்தார்.