“ஆரம்பிச்சிட்டாங்கையா!” பொது இடத்தில் மாணவிகளும் சண்டை போட்டு ரகளை!!
சென்னைக்கு அடுத்த ஆவடியில் மாணவர்களை போல பள்ளி மாணவிகளும் பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆவடி பேருந்து நிலையத்தில் சில மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
சகமாணவிகள் விலக்கிவிட முயன்றும் அந்த மாணவிகள் சண்டனையை கைவிடவில்லை. இதை பார்த்த மாணவர்கள் சிலர் விசில் அடித்தனர். மேலும் சிலர் வீடியோ எடுத்தனர். அங்கிருந்த நடத்துனர் மற்றும் பொதுமக்கள் சண்டையை தடுக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பள்ளி மாணவிகள் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக மாணவர்கள்தான் இப்படி மோதிக் கொள்வார்கள் இப்போது மாணவிகளும் பொது இடத்தில் இப்படி சண்டை போட்டுக் கொள்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து பலமாக தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பள்ளியில் நேற்று நடைபெற்ற மாதாந்திர தேர்வுக்கு வந்த மாணவிகள் அடிதடியில் இறங்கி இருப்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.