வேலை கேட்டு தென்காசி வந்த இளைஞன் திட்டமிட்டு படுகொலை : கொலைக்கான காரணம் என்ன??
உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சொந்த ஊருக்கு வரவழைத்து கொலை செய்து உடலில் கல்லை கட்டி குட்டையில் போட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் இவர் சில நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதை பார்த்த அரவிந்தின் உறவினர் ஒருவர் தான் வேலை வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். அந்த உறவினர் அரவிந்தை டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் வர சொல்லியிருக்கிறார்.
அரவிந்த்வும் வேலை கிடைக்கின்ற ஆர்வத்தில் அந்த உறவினரின் கீழப்புலியூரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கையில் அரவிந்திற்கும் அந்த உறவினருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அது பெரிய தகராறில் முடிந்தது.
அந்த தகராறால் அந்த உறவினர் தனது கூட்டாளிகள் 5பேருடன் சேர்ந்து அரவிந்த்தை கொலை செய்து அருகில் உள்ள கல்குவாரியில் அரவிந்த் உடலில் கல்லை கட்டி குட்டையில் போட்டு ஓடிவிட்டனர்.
இந்த தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறையினர் அந்த கல்குவாரிக்கு சென்று அரவிந்த் உடலை கைப்பற்றினர்.
அரவிந்தை கொலைக்கான காரணம் என்ன? ஒருவேளை திட்டமிட்டு தான் அரவிந்தை வரவழைத்தார்களா? அப்படியென்றால் இருவருக்குமான பகை என்ன? மேலும் இதில் சம்பந்த நபர்கள் யார் யார் ? என பல கோணங்களில் காவல்துறை அந்த உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
விசாரணையில் நிறைய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என அறியமுடிகிறது, காத்திருந்து பார்ப்போம்.