மகளை சந்தேகப்பட்டதால் கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்த மாமியார் சிக்கியது எப்படி … பாராட்டு மழையில் தனிப்பிரிவு மற்றும் தனிபடை போலீசார்
தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ராணி இவரது மகளுக்கும் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் காதல் திருமணம் ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மகளை அடிக்கடி சந்தேகப்பட்டு வேலை வெட்டிக்கு எதுவும் செல்லாமல் அரவிந்த் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது கணவர் வேலைக்கு செல்லாமல் தன்னை கொடுமைப்படுத்துவதாக தனது தாயார் ராணியிடம் மாலா தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் ராணி நயவஞ்சகமாக பேசி தமது மருமகனை கீழப்புலியூர் பகுதிக்கு வரவழைத்து கூலிப்படையினரை வைத்து கொலை செய்து அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் உள்ள குட்டையில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பதை பார்க்கும்போது மிகவும் திரில்லாக இருக்கிறது. கொலை செய்யப்பட்ட அரவிந்த் காணாமல் போனதாக அவரது மனைவி தென்காசி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.காணாமல் போனவர்கள் எங்கு சென்று இருப்பார் என்பதை தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் விசாரிக்க தொடங்கினார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு கிடைத்துள்ளது.
காணாமல் போனவரின் மொபைல் எண்ணை வைத்து Tracking செய்துள்ளனர். அப்பொழுது அவரது மொபைல் கேரள மாநிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அவர் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களை விசாரணை செய்ததில் கொலை செய்துவிட்டு அரவிந்தின் செல்போனை கேரளா சென்ற லாரி ஒன்றில் மொபைலை வீசப்பட்டதாகவும் போலீசாரை குழப்பும் வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை சார்பு உதவி ஆய்வாளர் கற்பது ராஜா சார்பு உதவி ஆய்வாளர்கள் மாதவன் மற்றும் தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் கூறிய அந்த இடத்தில் குட்டைக்குள் கிடந்த பிணத்தை தீயணைப்பு துறை உதவியுடன் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தனிபிரிவு. போலீசாரும் தனிபடை போலீசாரையும் உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.