“இனி தடுப்பூசி போட்டால் மட்டுமே வெளிய வரணும்” – மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….
மதுரையில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இன்றிலிருந்து பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், ஒரு வார கால அவகாசம் முடிந்த நிலையில், தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தடுப்பூசி செலுத்தியதை உறுதிசெய்ய அவர்கள் வேலை செய்யும் நிறுவங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாத பட்சத்தில் அவர்களை அருகிலுள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்படுள்ளது. இந்த உத்தரவு அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், இந்த நடைமுறையை கண்காணிக்க அரசின் சார்பில் மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை உள்ளிட்ட 6 துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுவர் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.