செய்திகள்

மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி கூலித் தொழிலாளி : உதவிய மனித நேயமிக்க காவலர்கள்

மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி கூலித் தொழிலாளிக்கு உதவிய மனித நேயமிக்க காவலர்கள்

திண்டுக்கல் மாநகராட்சி வெள்ளை விநாயகர் கோவில் சந்திப்பில் கூலித் தொழிலாளி ஒருவர் மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ஒரு தட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார், அப்போது திடீரென அவர்மயக்கம் அடைந்து சாலையின் நடுவே கீழே விழுந்தார்.

இதையடுத்து அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவலர் பெருமாள் மற்றும் சக காவலர்கள் அந்த தொழிலாளியை தூக்கி சாலையின் ஓரமாக அமர வைத்து தண்ணீர்க் கொடுத்து முதலுதவி செய்தனர்.

அவரிடம் கேட்டபோது எங்கு செல்ல வேண்டும் என கேட்ட போது பதில் ஏதும் கூறாமல் சென்றுவிட்டார். காவலர்கள் வண்டியில் உள்ள மருத்துவ உபகரணங்களில் ஆவணத்தில் இருந்த முகவரிக்கு தகவல் கொடுத்து வழவழைத்து ஒப்படைத்தனர். இச் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினரின் மனிதநேயத்தை பாராட்டிச் சென்றனர்.

செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button