காதலியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை பதிவிட்ட காதலன் : குண்டர் சட்டத்தில் கைது….
வேடசந்தூர் அருகே இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன் (28) என்பவர் நெருங்கி பழகி வந்துள்ளார் இந்நிலையில் அவர் அப்பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் மேகநாதனின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
உத்தரவைத் தொடர்ந்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட மேகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்