செய்திகள்
Trending

முஸ்லிம்னா கோவிலுக்கு போக கூடாதா….

முஸ்லிம்னா கோவிலுக்கு போக கூடாதா….

பிரபலமான பரதநாட்டியக் கலைஞர் மற்றும் கலைமாமணி விருது பெற்றவர், ஜாகிர் உசேன். தரிசனம் செய்வதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் பொழுது கோயிலில் தரிசனம் செய்ய ஜாகிர் உசேனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிறப்பால் ஒரு முஸ்லிமான ஜாகிர் உசேன், இந்து மதங்களின் மீது ஈடுபாடு கொண்டவர் ஆவார். இந்த சம்பவத்திற்கு ஐஏஎஸ் அதிகாரியான கவிதா ராமு கண்டனம் தெரிவித்துள்ளார். வேற்று மதத்தவர்கள் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று எவரும் கூறமுடியாது நம்பிக்கை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கோவிலுக்குள் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

பிறப்பால் இஸ்லாமியரான ஜாகிர் உசேன், பரதநாட்டியம் மீதான் ஈர்ப்பு காரணமாக, குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறியவர் ஆவார். குருகுல முறையில் தங்கி, பரதம் பயின்று வைணவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

ஜாகிரின் பரதநாட்டியப் பங்களிப்பைப் பாராட்டி அவருக்குத் தமிழ்நாடு அரசின் கலைமாணி விருது வழங்கிப் பெருமைப் படுத்தி உள்ளது. அதையும் திருச்சேறை சாரநாதப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தவர் ஜாகிர் உசேன். தமிழகம் மற்றும் திருப்பதியில் உள்ள பல்வேறு வைணவ திவ்யத் தலங்களுக்குத் தனிப்பட்ட வகையிலும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளார்.

இதற்கிடையே திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஜாகிர் உசேனுக்கு கோயிலுக்குள் நுழைய டிசம்பர் 10 ஆம் தேதி மதியம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரங்கராஜன் என்னும் நபர், தன்னை மதத்தின் பெயரால் மோசமாகத் திட்டியதாகவும் கோயில் வாசல் வரை நெட்டித் தள்ளியதாகவும் ஜாகிர் உசேன் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பு பலமுறை கோயிலுக்குச் சென்றுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலேயே நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விவரம் அறிந்த நாள் முதலாய், அரங்கனின் திருமுற்றம் என் தாய்வீடு போல எனக்கு நேர்ந்தது இனி எந்த ஒரு உயிரினத்திற்கும் நேரக் கூடாது என இது தொடர்பாக நடனக்கலைஞர் ஜாகீர் உசேன் மன வருத்தத்துடன் கூறினார்.

அரங்கன் அனைத்தும் அறிவான். எனக்கு மன அழுத்தத்தால் ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு என்னைத் திருவரங்கத்தை விட்டு வெளியேற்றியவனே பொறுப்பு என்று தெரிவித்திருந்தார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஜாகிர், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button