வடகரையில் டெங்கு அதிகரிப்பு : டெங்கு ஒழிப்பு தீவிரம் காட்டிய சுகாதாரத்துறை…
வடகரையில் டெங்கு ஓழிப்பு ….தீவிரம் காட்டிய சுகாதாரத்துறை மற்றும் வடகரை பேரூராட்சி நிர்வாகம்…
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகையில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிகமாகி வந்த நிலையில் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், வடகரை பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து தொடர்ந்து பல்வேறுகட்ட தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று (11-12-2021) காலை முதலே MASS DENGUE CONTROL ACTIVITIES துணை இயக்குநர் சுகாதார பணிகள் DR. அனிதா எம்பிபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் டெங்கு ஒழிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக மேற்க்கொள்ளப்பட்டது . வட்டார மருத்துவ அலுவலர் – DR. முகம்மது இப்ராகிம் எம்பிபிஎஸ் அவர்கள் தலைமையில் , DMO, JE பாலாஜி, ENTOMOLOGY TEAM, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குத்தாலிங்கம் மற்றும் கார்த்திக்..
பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் 17 பேர், 40 துப்புரவு பணியாளர்கள், 15 கொசு ஒழிப்பு பணியாளர்கள் , பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன் சுகாதார மேற்பார்வையாளர்கள் முருகன் மற்றும் எர்ஷாத்கான்ஆகியோர் இணைந்து வடகரையின் 11, 13, 16, 17, 18 ஆகிய வார்டுகளில் தீவிர டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டனர்.
பெரிய பள்ளிவாசல் தெரு, தைக்கா , தீப பள்ளிவாசல், ரகுமானியாபுரம் பள்ளிவாசல்களில் மருத்துவ முகாம் DR. விஷால், கவுதம் தலைமையில் நடைபெற்றது. வடகரையில் உள்ள குப்பைகளை அள்ளியதோடு, கொசு மருந்து அடிப்பது, நிலவேம்பு குடிநீர் வழங்குதல், டெங்கு கொசு புழு கண்டறிதல் போன்ற பணிகள் முழுவீச்சி மேற்கொள்ளப்பட்டது.