தென்காசி மாவட்டம் தென்காசியில் கஞ்சா போதையில் ஒருவருக்கு கத்திக் குத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் இதே வந்து கஞ்சா போதை ஏறி இருந்த ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தி இருந்தார் இது தொடர்கதையாகி வருகிறது. வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு இருசக்கர வாகனங்களில் கஞ்சா வியாபாரிகள் வலம் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை உறுதி செய்யும் விதமாக இன்று மாலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற ஒருவரை அப்பகுதியில் உள்ளொருவர் ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தட்டி கேட்டவரை குத்தியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த தென்காசி காவல்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட அந்த நபரை மருத்துவமனையில் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது. சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் தென்காசி போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இந்த கஞ்சா விற்பனையில் கண்டுகொள்ளாமல் மந்தமாக இருப்பது ஏனோ என பொதுமக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்