செய்திகள்
Trending

இறுதிச்சடங்கு கூட சரியாக செய்யமுடியாத அவலநிலை!! கண்டுக்கொள்ளுமா நிர்வாகம்?

இறுதிச்சடங்கு கூட சரியாக செய்யமுடியாத அவலநிலை!! கண்டுக்கொள்ளுமா நிர்வாகம்?

எங்கே நிம்மதி… எங்கே…… நிம்மதி….. அங்கேஎனக்கோர் இடம் வேண்டும்…… என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது சராசரியாக ஒரு மனிதன் இன்முகத்தோடு பன்முகத்தன்மை கொண்டு இவ்வுலகில் பிறந்தான் பிறகு குடும்பம் என்ற ஒன்றை உருவாக்கி வளர்ந்தான் உழைத்தான் பின்பு அவனை நம்பி சார்ந்திருக்க தாய் தந்தை மனைவி மக்கள் இவர்களுக்கெல்லாம் தேவைகளை உருவாக்கிவிட்டு மண்ணுலகை விட்டு ஓய்வு தேடுகிறான் இது எதார்த்தமான ஒன்று அனைவருக்கும் பொருந்தும்..

இறந்த பிறகும் ஒருவன் நிம்மதியாக ஈமச்சடங்கு செய்ய முடியாத ஒரு அவல நிலை தான் நீங்கள் மேலே பார்க்கக்கூடிய காணொளிக்காட்சி ஆம் தென்காசி மாவட்டம் என்ற கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் தான் இடைக்கால் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு பகுதி இடைகால் இருந்து வருகிறது.

அப்பேற்பட்ட ஊரில் இரவு நேரங்களில் யாராவது இறந்தால் கொண்டு செல்வதற்கு எந்த வகையான வசதிகளும் கிடையாது குறிப்பாக சாலை வசதி மின்விளக்கு வசதி தண்ணீர் வசதி எதுவுமே இல்லாமல் அப்பகுதி மக்கள் யாராவது இறந்தால் ரகங்களை கொண்டு செல்வதற்கு கூட இருசக்கர வாகனத்தின் மின் விளக்குகளால் ஒளியில் மட்டும் இறுதி சடங்கு செய்யும் நிலைமை இங்கே இருக்கிறது..

இப்பகுதி மக்கள் பல தடவை ஊராட்சி தனி அலுவலரிடம் புகார் அளித்திருக்கிறார்கள் அங்கே வரும் புகார்களை புறந்தள்ளிவிட்டு 32 வருடங்களாக அதே ஊரில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் மக்கள் அவரிடம் பலமுறை இது சம்பந்தமாக பேசினால் போதும் பார்த்துவிடுவோம் வந்துவிட்டார்களா மேற்கொண்டு என்று ஏளனமாகப் பேசும் ஊராட்சி தனி அலுவலர் பொதுவாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இது போன்று தான் காட்சியளிக்கிறது.

தென்காசி மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை மூன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பயணம் செய்யத் தொடங்கி விட்டார்கள் ஆனால் அவர்களிடம் எத்தனையோ முறை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் சார்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்கள் மாற்றினால் விடிவு காலம் பிறக்கும் என்று புகார் மனு அளித்து இருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை பிறகு எப்படி ஊராட்சி செயலாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்? ஒரு மனிதன் இறப்பில் கூட துன்பப்பட வேண்டுமா? ஒரு நியாயம் வேண்டாமா?? ஒரு நீதி பிறக்காதா?? என்று புலம்பும் இரவு நேர இடைகால் சமூகத்தினர்..

கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகமும் பிறக்கட்டும் மயானத்திற்கு இருளில் இருக்கிறது மயானத்தில் இறந்தவர்கள் சடலத்தின்மேல் வைக்கப்படும் தீயின் மூலமாக வெளிச்சம் இருக்கிறது…. அரசு நிதியின் மூலமாக வெளிச்சம் இல்லை என்பது நிதர்சன உண்மை நீதி கிடைக்குமா? நீதி சாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button