தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் முதலாம் மாநில மாநாடு : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் !!
தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலச் செயற்குழு இன்று ( 11.12.21 ) நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் எம்.எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் வேலவன் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் நடந்துள்ள வேலைகள் குறித்தும் எதிர்வரும் 22.01.22 அன்று நாகையில் நடைபெறவுள்ள முதலாம் மாநில மாநாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அறிக்கை சமர்ப்பித்தார்.
மாவட்டங்களில் இருந்து வந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் விவாதங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. கடந்த காலத்தில் சங்க நடவடிக்கைகளுக்காகபழிவாங்கப்பட்டு உணவு பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகனுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக மீளப்பணி வழங்கிய மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உயர்திரு மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், துறையின் முதன்மைச் செயலாளர், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களுக்கும், அதற்கு பேருதவி புரிந்த கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பி.நாகைமாலி அவர்களுக்கும் இச் சயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2. நீண்ட காலமாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அலுவலகம் பல இடங்களில் இல்லாமல் இருந்ததை சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில், அவர்களுக்கான அலுவலக இடம் ஒதுக்கீட்டிற்காக நடவடிக்கை எடுத்துள்ள மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களுக்கு நன்றியை இச் செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.
3. எதிர்வரும் 22.01.21 அன்று நாகப்பட்டினத்தில் முதலாம் மாநில மாநாடு கோரிக்கைகளாக புதிதாக எதனையும் சேர்ப்பது இல்லை எனவும், கடந்த பத்து ஆண்டுகளாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளில் கண்டுள்ளபடி மட்டுமே உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஏற்கெனவே அரசு வெளியிட்டுள்ள தற்காலிகபணிவிதியில் உரிய பாதுகாப்பு பிரிவு சேர்க்கப்பட வேண்டும், இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றாக தொடர்ந்து பரிசு பெற்றுவரும் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு அலுவர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் குறித்து அரசு நிர்வாகத்திற்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் ஏற்கனவே கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுல்லதாலும், அவை அவர்களுக்கு தெரியும் என்பதாலும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுத்து ஆணைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மத்தியில் நிலவுவதாலும், புதிதாக மாநில மாநாட்டில் எந்தவொரு கோரிக்கையையும் சேர்ப்பது இல்லை என இச் செயற்குழு முடிவு செய்கிறது.
4. அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் தவிர்த்து, மாநில ஆணையரக அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய நிலுவைகளை மாநில மாநாட்டிற்கு முன்னதாக முடித்துத்தர ஆணையரை இச் செயற்குழு கேட்டுகாகொள்கிறது.
மாநில நிர்வாகிகள் பி.நல்லதம்பி, ஆர்.வேலவன், வி.ஜெயவேல், எஸ். செல்வன், ஜே.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இந்திய தொழிற்சங்க மையத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் வி.பி.நாகைமாலி அவர்கள் வரவேற்புக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவர்களாக பா.ராணி ( தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்), சு.சிவகுமார் ( நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்), ப.அந்துவன் சேரல் ( புள்ளியியல் சார்நிலை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர், சொ.கிருஷ்ணமூர்த்தி ( அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர், கே.இராஜூ ( சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்) …உள்ளிடோரும், செயலாளராக அ.தி.அன்பழகனும், இணைச் செயலாளர்களாக மாநில நிர்வாகிகளும், பொருளாளராக ஜான் சிம்சன் ஆகியோரும் தேர்தெடுக்கப்பட்டனர்.இறுதியாக மாநிலப் பொருளாளர் ஜான் சிம்சன் நன்றியுரையாற்றினார்.