சென்னையில் கஞ்சா விற்பனை : ஒருவர் கைது….
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் ரூபன் ப்ராங்க் அவர்கள் தலைமையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு மற்றும் முதல் நிலை காவலர் ரவிவர்மன் காவலர் நரேஷ் பாபு காவலர் அருண் ஆகியோர்கள் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது.
இன்று 12.12.2021 காலை கஞ்சா விற்பனை சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் படி மடிப்பாக்கம் கூட்ரோட்டில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது TN87 B 0364 Hero Unicorn என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த கங்கேஷ்வர் சேர்த்தி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து உத்தரவின்படி மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வசம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள் : ரமேஷ், சென்னை