தூத்துக்குடி மீனவ குடியிருப்பில் புகுந்த பார்ஜர் கப்பல்-பரபரப்பு.
தூத்துக்குடி இனிகோநகர் மீனவ குடியிருப்பில் பார்ஜர் கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த பார்ஜெட் கப்பல் இனிகோ நகர் கடலோரப் பகுதியில் குடியிருப்பை வந்து மோதியதால் பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு கொழும்பு உள்ளிட்ட சில நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக பார்ஜெர் எனப்படும் சிறிய வகை கப்பல் ஒன்று இயக்கப்படும்.ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றிச்செல்லும்.
சரக்குகளை ஏற்றுவதற்காக பழைய துறைமுகத்தில் இடம் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் நங்கூர பகுதியில் நிறுத்தப்படும்.
அவ்வாறு இடமில்லாத காரணத்தால் “முத்தா எமரால்ட்” என்ற பார்ஜெர் கப்பல் பழைய துறைமுகத்தில் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த கப்பலானது இன்று காலை திடீரென காற்றின் வேகத்தில் காரணமாக கடலில் சீற்றத்தின் காரணத்தினாலோ அங்கிருந்து இனிகோ நகர் கடற்கரை பகுதியில் வந்து மோதியது.
இனிகோ நகர் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள் மீது இதே போல இருந்தது.
இந்த பாரதியார் கப்பல் வருவதைக் கண்ட மீனவர்கள் உடனடியாக அங்கிருந்த தங்களது பைபர் படகுகளை நகத்தின் கடற்கரைக்கு கொண்டு வந்து பாதுகாத்தனர். இதன்காரணமாக அங்கிருந்த பல படகுகள் இந்த விபத்தில் இருந்து தப்பின. இந்த பார்ஜெர் கப்பல் அங்கு வந்து சேர்ந்ததை அந்த பகுதி மக்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மீனவர்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்களது படங்களை அகற்றி அதன் காரணமாக ஏராளமான படங்கள் சேதமடைவது தவிர்க்கப்பட்டது.