அடிப்படை வசதியின்றி நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சி : போட்டியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்குவாதம்……
உலக சாதனை நிகழ்ச்சியில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பெற்றோர்கள் சிலம்பம் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுதிண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள பழனி சாலையில் தனியார் பள்ளியில் உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சிக்கு உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சங்கம் சார்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
மதுரை சென்னை தேனி சிவகாசி ராமநாதபுரம் திருச்சி நாகை கன்னியாகுமரி கோவை பாண்டிச்சேரி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்.
இந்த உலக சாதனைக்கு பங்கேற்பதில் ஆர்வம் உடன்வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அந்தப் பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சிக்கு சிலம்பம் சுற்றுவது அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என அறிவித்துவிட்டு அங்கு சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் பாத்ரூம்.மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிந்த பெற்றோர் தாங்கள் கொண்டு வந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்தனர் . வீரர்கள் பங்கேற்பதற்காக தலா ஒரு நபருக்கு 1,200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது .
பெற்றோர்கள் கூறும் பொழுது எந்தவித அடிப்படை வசதியும் செய்யாததை அறிந்த பெற்றோர்கள் உலகசாதனை நிகழ்ச்சிக்கு இங்கு வந்தால் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எங்களுடைய குழந்தைகளுக்கு கூட சரியான குடிநீர், கழிப்பிடம் மற்றும் உடைமாற்றும் அறை, முதலுதவி சிகிச்சை போன்ற சராசரி அடிப்படை வசதிகளை செய்து தராமல் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உடனடியாக இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் இது போன்ற தனி அமைப்புகள் உலக சாதனைக்காக பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
அனுமதி வழங்குவதற்கு முன்பு அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று அங்கு வந்திருந்த ஏராளமான பெற்றோர் தெரிவித்தனர். பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற அலட்சியமாக செயல்படும் நிர்வாகத்தின் மீது மற்றும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்