வயது ஏற ஏற வலிமையும் இளமையும் திரும்பும் ரஜினி ரசிகர்கள் புகழாரம்
திண்டுக்கல்
வயது ஏற ஏற வலிமையும் இளமையில் திரும்பும் தலைவராக ரஜினி இருப்பதாக திண்டுக்கல்லில் அவரின் பிறந்தநாளை கொண்டாடிய அண்ணாத்தே குரூப்ஸ் ரஜினி ரசிகர்கள் கூறினர்.
நடிகர் ரஜினிகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல்லில் அவர் பிறந்த நாளை முன்னிட்டு கேட்டவர்க்கு கேட்ட வரம் தருகின்ற வெள்ளை விநாயகர் கோயிலில் திண்டுக்கல் அண்ணாத்தை ரசிகர் குரூப் சார்பில் அவர் பெயரில் அர்ச்சனை செய்து ,அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர் .
பின்பு அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கி ரஜினி நூறாண்டு காலம் வாழ்க… நோய் நொடி இல்லாமல் வளர்க என கோஷங்களை எழுப்பினர். பின்பு இதேபோல திண்டுக்கல் மணி கூண்டில் உள்ள தூய வளனார் பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, பிரார்த்தனை செய்தனர். பேகம்பூரிலுள்ள உள்ள பெரிய பள்ளிவாசலில் பாத்தியா ஓதி அவர் நீண்ட நாள் வாழ வழிபட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் அண்ணா குரூப்ஸ் ரசிகர்கள் கூறியதாவது: திரை உலகில் எங்கும் ரஜினி… எதிலும் ரஜினி என்ற அவர் கொடிகட்டிப் பறந்தாலும், அவர் என்னமெல்லாம் தமிழக மக்களின் உயர்விலும் அவர்கள் வாழ்வு சிறப்பதிலும் உள்ளது. அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், நீண்ட ஆயுளுடன் நிலைத்த புகழுடன் வாழ வேண்டி அபிஷேக ஆராதனைகளை செய்தோம். மும்மதத்தினரும் போற்றும் வகையில் பிரார்த்தனையில் ஈடுபட்டோம். அவர் நூறாண்டு காலம் வாழ்க …நோய் நொடியில்லாமல் வளர்க…தேர் ஆண்ட மன்னர் தமிழ்போல அவர் செழிக்க வாழ்த்துக்கள் ,,என்றனர்.