நாகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் விறுவிறுப்பாக தொடங்கிய அதிமுக அமைப்புத் தேர்தல் ; ஒன்றிய, நகர பொறுப்புகளுக்கு அதிமுகவினர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடைபெறும். அதன்படி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைப்பு தேர்தல் இன்று காலை தொடங்கியது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அருண் மொழி தேவன், பாண்டியன் மற்றும் முன்னாள் எம்.எல். ஏ முருகு பாண்டியன் ஆகியோர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்தலில் ஒன்றிய, நகர, பேரூர், வார்டு பொறுப்பாளர் பதவிகளுக்கு அதிமுகவினர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள தேர்தலின் முடிவு நாளை மாலை வெளியிடப்பட உள்ளது.
செய்திகள் : ச. ராஜேஷ், நாகை