கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பில் பொருள்கள் தீயில் கருகி சேதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது.
இன்று தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது தொழிற்சாலை வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. இதில் தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருட்கள் மற்றும் வார்னிஷ் இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்து தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி