மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை….
யூடியூபரான மாரிதாஸ், மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்வீட் போட்டதாக, திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாரிதாஸ் மீது 124A, 153-A , 504 505 (1)b 505 ( 2) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்றது தரப்பு வாதங்களையும்
முப்படை தலைமை தளபதி மரணம் தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு பதிவு செய்தது செல்லாது என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக 2020-இல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.