நாகை மாவட்டம்
வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல்துறை காக காத்து நின்ற கணவன் . உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு முகவரியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரும், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவரும், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தீபாவளிக்கு பிறகு சுமார் 45 நாட்களுக்கு முன்பு இந்துமதி வேறு ஒருவருடன் சென்றுள்ளார். ,
மீண்டும் இந்துமதியை செல்லதுரை தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்துள்ளனர். அதன் பின்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, மேற்படி இந்துமதி அவரது சகோதரியின் கணவரான, வேளாங்கண்ணி அருகே குறிச்சி ஊராட்சி ஆய்மழை மேலத்தெரு மெயின்ரோடு சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டிற்கு நேற்று காலை வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் செல்லதுரை, நேற்று இரவு குறிச்சி ஆய் மழைக்கு வந்து தனது மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். , இன்று காலை 9 மணி அளவில் இந்துமதி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார் சம்பவ இடத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் இந்துமதி.
கொலைக்கு பின்பு காவல்துறை காக அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.