செய்திகள்

படியில் தொங்கினால் பேருந்து பறிமுதல் : அதிரடியாக ஆரம்பித்த நாகை கலெக்டர்!!

படியில் தொங்கினால் பேருந்து பறிமுதல் : அதிரடியாக ஆரம்பித்த நாகை கலெக்டர்!!

படிக்கட்டில் தொங்கி சென்ற பள்ளி மாணவர்கள். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட தனியார் பேருந்து பறிமுதல். ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.

சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதலான ஆட்களை ஓட்டுநர்கள் ஏற்றிச் செல்வதால், அதிலிருந்து சிலர் தவறி விழுந்து உயிர் இழப்பதுடன் பெரும் விபத்தும் நேரிடுகிறது.

இதனிடையே இன்று வேதாரண்யத்தில் இருந்து  நாகப்பட்டினம் நோக்கி வந்த RS மணி என்ற தனியார் பேருந்து அதிக அளவிலான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது. அப்போது பேருந்தில் வந்த பல மாணவர்கள் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

அப்போது அவ்வழியே காரில் சென்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இதனைக் கவனித்து உடனடியாக புகைப்படம் எடுத்து அதனை வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து நாகை அடுத்த புத்தூர் அருகே தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபு உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றி வந்த பேருந்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ஓட்டுநர் நடத்துனரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றியதற்காக இந்த RS மணி பேருந்து பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : ச.ராஜேஷ், நாகை மாவட்டம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button