திமுகவுடன் இணைந்த அதிமுக முக்கிய நிர்வாகி!! “பின்னாடி இன்னும் நிறைய பேர் வருவாங்க”
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகியும், முன்னாள் எம்பியுமான நடராஜன் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக சார்பாக 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடராஜன். கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாததால், அந்த மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்த திமுக முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் முழு வெற்றியை பெற்று விட வேண்டும் என செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கோவை முன்னாள் எம்பி திமுகவில் இணைந்த்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்ற தமிழக முதல் அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
நான் கோவை மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாற பணியாற்றுவேன். ராமருக்கு அணில் போல கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு பணியாற்றிய முதல்வருக்கு உறுதுணையாய் நிற்பேன். எதிர்காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கவும், தமிழ் வளரவும் முதல்வருடன் இணைத்து பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.