சென்னையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை : இன்று ஒருவர் கைது!!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு. ப்ராங்க் ரூபன் அவர்கள் தலைமையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு மற்றும் முதல் நிலை காவலர் ரவிவர்மன் ஆகியோர்களை தனிப்படை அலுவல் நியமித்து கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது.
இன்று 14.12.2021 இரவு சுமார் எட்டு மணிக்கு கஞ்சா விற்பனை சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் படி பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை சந்திப்பு அருகில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த
கொண்டா நாஹக்,M/30
S/0 பன்சி நாஹக்
என்பவர் கையில் ஒரு மூட்டையுடன் நடந்து வந்தவனை உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைகாவலர் மடக்கிப்பிடித்து விசாரணை செய்து அவனிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து உத்தரவின்படி பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மகுடேஸ்வரி வசம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு விசாரித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்திகள் : தமிழன்ரமேஷ், சென்னை