நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி!!
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.
நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது விக்ரமுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுபெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மகான்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து பிரபல நடிகர் அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.தற்போது தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு அதிகமடைவதால் அச்சம் நிலவுகிறது.