மார்கழி மாதம்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மார்கழி மாத முதல் நாளில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்..
தமிழ் மாதத்தில் மார்கழி மாதம் முழுவதும் இந்துக்கள் அதிகாலையிலே கோவிலுக்கு சென்று பஜனைகள் பாடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்..
இந்தநிலையில் இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடை திறப்பு பூஜை காலங்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி