திமுக என்றாலே அராஜகம் தான் பாமக மாநில பொருளாளர் திலகபாமா அம்பாத்துரையில் பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளப்பட்டி, செம்பட்டி, அம்பாத்துரை உள்ளிட்ட பகுதிகளில் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து போஸ்டர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது.
சின்னாளபட்டியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த பாமகவினர் மீது திமுகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி தொகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைத்தையும் திமுகவினர் கிழித்து எறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த பாமக மாநில பொருளாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான திலகபாமா அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வெங்கடாசலத்திடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்