கிராமபுற பால்கூட்டுறவு சங்க மகளிருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!!
நாகை பிராதாப ராமபுரத்தில், பால் உற்பத்தியாள கிராமப்புற பெண்களுக்கு
பால் கோவா, பன்னீர், வெண்ணெய், நறுமணப்பால்- பாதாம், ரோஸ்மில்க், கேரட் மில்க், பீட்ரூட் மில்க்,தயாரித்தல் பயிற்சி
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், தேசிய மகளிர் ஆணையம், புதுதில்லி நிதியுதவியுடன் கிராமப்புற பால்கூட்டுறவு சங்க மகளிருக்கான 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு தொடர்புடைய அரசு நிறுவனங்களில் இருந்து வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டு பால் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான விரிவான பயிற்சி மற்றும் செயல்விளங்களை செய்து காண்பித்தனர்.
இந்த பயிற்சில் இலாபகரமான கறவை மாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் கட்டுப்பாடு, இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகை மேலாண்மை மற்றும் மதிப்புகூட்டிய பால் பொருட்களான பால் கோவா, பன்னீர், வெண்ணெய், நறுமணப்பால்- பாதாம், ரோஸ்மில்க், கேரட் மில்க், பீட்ரூட் மில்க், ஊணீர் பானம் தயாரித்தல் ஆகியவை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த பயிற்சின் முக்கிய அங்கமாக கண்டுணர்வு பயணமாக காரைக்கால் அம்மையார் பால்பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர் மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு நிதி உதவியும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை