கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த பேராசிரியர் : நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகம்!!
கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக பேராசிரியர் மீது மாணவிகள் புகார். புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகம் என குற்றச்சாட்டு.
சென்னை பள்ளிகரணை ஜல்லடையான் பேட்டையில் உள்ள ஆசான் மெமோரியல் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் இருவர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகாரளித்துள்ளனர்.
முன்னதாக கல்லூரி மாணவிகள் துறை தலைவர் பத்மநாபனிடம் கடந்த 6ம் தேதி ஆபிரகாம் அலெக்ஸ்(48), என்பவர் மீது புகார் கொடுத்துள்ளனர். புகாரை கல்லூரி நிர்வாக பொறுப்பாளர் ஷீலா மேரி விசாரித்து விட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பள்ளிகரணை போலீசார் கல்லூரி முதல்வர் ராம்நாதன் மற்றும் தவறாக நடந்து கொண்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் N.S. குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயலஷ்மி ஆகியோர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பேராசிரியர் ஆபிரஹாம் அலெக்ஸ் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்
ஆபிரஹாம் அலெக்ஸ் என்பவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
செய்திகள் : ரமேஷ், சென்னை