ஏங்க!! நாய்க்கு சாப்பாடுதான குடுத்தேன் : அதுக்கா 8லட்சம் அபராதம்!!
மும்பையில் என் . ஆர் . ஐ . ஹவுசிங் காம்ப்ளக்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது . இங்கு 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன .
இந்த குடியிருப்பைச் சேர்ந்த அன்சு சிங் என்பவருக்கு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர் குடியிருப்பில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு உணவு அளித்துள்ளார். ஆனால் இந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி உணவு வழங்கினால் ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத அன்சு சிங், தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார். இதற்காகத் தினமும் இவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது.
இப்படி கடந்த ஜூலை மாதம் முதல் அபராதம் விதிக்கப்பட்டு வந்ததில் தற்போது ரூ. 8 லட்சம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் இதே குடியிருப்பைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது