43 மீனவர்கள் கைது 6 படகுகள் பறிமுதல் மீனவர்கள் கொந்தளிப்பு மீனவர்களையும் படகுகளையும் உடனே விடக்கோரி இராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மத்திய அமைச்சர்களுக்கு கோரிக்கை.
நேற்று 18ந்தேதி இராமேஸ்வரத்திலிருந்து 537 விசைபடகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
மீனவர்கள் அனைவரும் கச்சதீவு , நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 6 படகுகளையும் 43 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று காங்கேசன் துறைமுகாமில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி மீனவர்களையும் படகையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கேட்டுள்ளார். இராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர்கள் அனைவரும் இச்சம்பவம் குறித்து பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.
செய்திகள் : ஒளரங்கசீப், இராமேஸ்வரம்