55 மீனவர்கள் கைது : ராமேஸ்வர மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!!
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு இலங்கை சிறையில் உள்ள 55 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரியும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேஸ்வர மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்பகுதியில் மீன் பீடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.
சில மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் பல மீனவர்கள் இலங்கை சிறையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். படகுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
கடற்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50ஆயிரம் மீனவர்களும் ஒரு லட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.
செய்திகள் : ஔரங்கசீப், இராமேஸ்வரம்