ஜோஸ்ஆலுக்காஸில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு!!!
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையானது இரவு 10 மணிவரை செயல்பட்டிருக்கிறது. இதனிடையே நகைக்கடையின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் கீழ்த்தளத்திலுள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதில் நகைக்கடையில் இருந்த 15 கிலோ தங்க நகைகள், 500 கிராம் வைரம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
டிசம்பர் 15ஆம் தேதி வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவற்றில் துளையிட்டு 15 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக ஏற்கனவே டீக்காராமன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டீக்காராமன் தகவலை அடுத்து மேலும் 10 பேரை பிடித்து வைத்து போலீசார் நடத்தியதில் தற்போது சுடுகாட்டில் அந்த நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.
இதனையடுத்து டீக்காராமன் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உள்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தினர். பிடிபட்ட 10 பேர் கும்பலுக்கு ஆந்திர கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலையில் தற்போது சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.