செய்திகள்
Trending

தொடர்ந்து இலங்கையின் அட்டூழியம் : மேலும் 14மீனவர்களை சிறைபிடிப்பு!!

தொடர்ந்து இலங்கையின் அட்டூழியம் : மேலும் 14மீனவர்களை சிறைபிடிப்பு!!

புதுக்கோட்டை மயிலாடுதுறை 2 படகுகள் 14 மீனவர்கள் சிறைபிடிப்பு…. தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியம்… நடவடிக்கை எடுக்குமா அரசு

நேற்று மதியம் புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் புதுக்கோட்டையில் இருந்து ஒரு படகும் ஏழு மீனவர்களையும் மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு படகையும் 7 மீனவர்களையும் மொத்தம் 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 8 படகையும் 55 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் மேலும் புதுக்கோட்டை மயிலாடுதுறை மீனவர்களையும் படகுகளையும் கைது செய்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினரை கண்டித்து வருகின்ற 3ஆம் தேதி புதன்கிழமை தங்கச்சிமடத்தில் அனைத்து மாவட்ட மீனவர்களும் ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கின்றனர் ஜனவரி 1ஆம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் ஈடுபடப்போவதாக மீனவ சங்க தலைவர் பி.சேசு ராஜா அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீனவர்களை சந்தித்து தனது சொந்த செலவில் படகு உரிமையாளர்களுக்கு 50,000 ரூபாயும் படகில் சென்று அவரின் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாயும் மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.

மேலும் முதலமைச்சர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து வருகிறார் விரைவில் படகும் மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று அவர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை மீனவர் சங்கத் தலைவர்கள் பி.சேசு ராஜா,எஸ்.எமரிட் மற்றும் பலர் சந்தித்தனர்.

செய்திகள் : ஔரங்கசீப், ராமேஸ்வரம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button