தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் இடைகால் அருகே உள்ள சிவராம பேட்டை பகுதியில் சாலை ஓரங்களில் காற்றில் அடித்து வரப்பட்ட மணல் குவியல்களில் இருசக்கர வாகனங்களில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகிறது இப்பகுதி ஆய்க்குடி காவல் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும்கூட இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் அப்பகுதியில் உள்ள சில நண்பர்களை அழைத்து அப்பகுதியில் உள்ள மணல் துகள்களை அகற்றி அப்புறப்படுத்தி விபத்து ஏற்படாத வண்ணம் பார்த்து வருகிறார்
இவரது இந்த செயலை பார்த்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் உயர் அதிகாரிகளும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் விபத்து நடக்கின்ற பகுதி மாற்று காவல் எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் கூட தாமே முன் நின்று பாகுபாடு பார்க்காமல் சேவை செய்து வருவது பாராட்டுதலுக்கு உரியது