அரசியல்செய்திகள்

‘தமிழகத்திற்கு நல்லது நடக்கணும்னா.. திமுக மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும்..’ அண்ணாமலை பளீச்

தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் திமுக மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படும்.

திமுகவை சேர்ந்த தலைவர்களும் கூட இந்த Go back Modi என்ற ஹேஷடேக்கில் ட்வீட் செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் இதுதான் நடக்கும்.

Go back Modi

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இது குறித்த அறிவிப்பு வெளியான உடன் Go back Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இருப்பினும், பிரதமர் மோடி நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க விருந்தினராக வருவதால் மோடிக்கு எதிரான கோஷங்கள் இருக்காது என திமுக அமைச்சர்கள் விளக்கினர்.

அண்ணாமலை பேச்சு

இதற்கிடையே மதுரை சிந்தாமணி அருகே உள்ள தனியார் விடுதியில் மதுரை பாஜக மற்றும் தென் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, ‘தமிழகத்தில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி நேரடியாக வர வேண்டும் எனத் தமிழக அரசு தான் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை இல்லை. பிரதமர் மோடி தமிழகம் வந்தால் அவரை வரவேற்று, கண்டிப்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் தற்போது ஓமிக்ரான் பரவல் காரணமாகக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாலம் எனக் கூறப்படுகிறது. கூடுதல் கட்டுப்பாடுகள் இல்லையென்றால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரதமருக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

திமுக

பொங்கல் விழா நடத்தப்பட்டால் தமிழக மக்களுடைய கலாசாரத்திற்குப் பிரதமர் அவர்கள் கௌரவம் கொடுக்கும் விதமாகத் தான் இருக்கும்., இதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பு அரசியலைத் தமிழகத்தில் கொண்டு வந்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்று பின்னரும் கடந்த 3 மாதங்களில் எதிர்க்கட்சி போன்றே திமுக அரசு செயல்படுகிறது.

இணக்கமாகப் போக வேண்டும்

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி நடந்து கொண்டதோ அதே போன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பும் மத்திய அரசு அதே போல் செயல்படுகிறது. தமிழக அரசு புரிந்துகொண்டு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மாநில அரசுக்கு நல்லது. திமுக அரசின் தலைவர்கள்-அமைச்சர்கள் தொண்டர்கள் உட்பட அனைவரும் பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் அனைவரும் வரவேற்க வேண்டும். பிரதமர் வருவதென்பது தமிழ்நாட்டின் நலனிற்காக மட்டுமே.

மதுரை விமான நிலையம்

மதுரையைச் சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒரு பெரிய இடத்தை தமிழக அரசு விரைவில் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும், அதற்காகத் தமிழக எம்பிக்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து மத்திய அமைச்சருக்கு அறிக்கையாகத் தகவல் அளிப்பதை விட்டுவிட்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button