தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என பேட்டியளித்தார்.