மீண்டும் ஊரடங்கு!! எதற்கெல்லாம் அனுமதி!!
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கொரோன தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.ஆனாலும் இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவதிய சேவைகள் கிடைக்கும்.
மாநிலத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி. பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருந்துக் கடைகள், ஆய்வகங்கள், அமரர் ஊர்தி சேவைகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட அனுமதி. அவர்கள் நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
ஞாயிறு அன்று முழு முடக்கம் அமல்படுத்தப்படும். அன்றைய தினம் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை கிடையாது. ஆனாலும் மருந்துவமனைகள், மருந்தகங்கள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் மையங்கள் செயல்படும்.
ஞாயிறு அன்று உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் உண்டு. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் இயங்கலாம்.
மற்ற மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
- மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப்பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
- 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
- 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொருட்காட்சிகள், புத்தக் காட்சிகள் ஒத்திவைப்பு.பொது பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் செல்ல அனுமதி.
- அனைத்து பொங்கல் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன.அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.
- கடற்கரைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
- கடைகள், வணிக வளாகங்களில் பணிபுரிவோர் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
எதற்கெல்லாம் அனுமதி?
- உணவகங்கள், விடுதிகள், அடுமனைகளில் 50% வாடிக்கையாளர் அனுமதிக்கப்படுவர்.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும்.இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம்.
- துணிக்கடைகள், நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
- உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- திரையரங்குகளில் 50% பேருக்கு அனுமதி அளிக்கப்படும்.
- அழகு நிலையங்கள், சலூன்களில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.