நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டங்களை குறித்தும், அதன் காரியங்களை குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது,
சட்டப்பஞ்சாயத்து இயக்க மாநில மாநாட்டில் எடுத்த ஊறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், வேளாங்கன்னி பேரூராட்சி சட்டப்பஞ்சாயத்து செயலாளர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த போக்சோ சட்ட விழிப்புணர்வு மற்றும் ,தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க விழிப்புணர்வு கூட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் செந்தில் வேல் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், பூவத்தடி அரசு மேல்நிலைப்பள்ளி யில் நடத்தப்பட்டது இக்கூட்டத்தில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டணர், முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் வரவேற்புரையாற்றினார், நிறைவில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த வீரமணி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் . பிரதாபராமபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவராசு, தலைமையாசிரியர் ஓய்வு லூர்து மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ச.ராஜேஷ்