முக்காடு போட்டு திருடும் அரை நிர்வாண ஆசாமி!! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!
நாகை அருகே சூப்பர் மார்க்கெட்டில், கைவரிசை காட்டிய அரைநிர்வாண ஆசாமியின் வைரல் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பகுதியில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் மற்றொரு கிளை மூன்று மாதங்களுக்கு முன்பு ஆலத்தம்பாடியில் தொடங்கப்பட்டது.
கடந்த ஜன.3 தேதி இரவு கடை வழக்கம்போல பூட்டப்பட்ட நிலையில் அன்று நள்ளிரவு, அரை நிர்வாண கோலத்தில், இரும்பு கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி, தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். கடையின் லாக்கரில் இருந்த 50 ஆயிரத்தை அலேக்காக திருடிய அரைநிர்வாண ஆசாமி, சிசிடிவி யில் முகம் தெரியாமல் இருக்க முக்காடு போட்டு தப்பித்து சென்றுள்ளார்.
கடையில் 57000 திருடு போய் இருக்கும் சம்பவம் கடை உரிமையாளருக்கு தெரியவந்த நிலையில்,சூப்பர்வைசர் கமலக்கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
அரைநிர்வாண ஆசாமி திருடும் சிசிடிவி காட்சிகளோடு அவர் பற்றி சரியான தகவல் தருவோருக்கு சன்மானம் ரூபாய் 15000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், திட்டம் போட்டு திருடும் கூட்டங்களுக்கு மத்தியில் முக்காடு போட்டு அரை நிர்வாண கோலத்தில் கடைக்குள் புகுந்து மர்ம ஆசாமி
திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை