நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரெய்டு :
திண்டுக்கல் பாண்டியன் நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு) கோட்ட பொறியாளர் மதன்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு விசாரணை
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் மதன்குமார் ஒப்பந்தக்காரர்கள் செய்த பணிகளுக்கு நிதி வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர் புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு இணைந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் ரூபா கீதாராணி மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் நடத்திய திடீர் சோதனையில் மதன்குமார் அறையில் கணக்கில் வராத ரூ 4 லட்சத்து 70 ஆயிரம் பழத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்கிறார்கள்.
செய்திகள் : திண்டுக்கல், ரியாஸ்