புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465, ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டசிறப்பு கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி நாளை அதிகாலை சந்தனம் பூசும் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழாவில் வருடம் தோறும் பர்மாவில் கைகளால் எம்ராய்டிங் செய்யப்பட்ட புனித கொடி ஏற்றப்படும், அது போல இந்த ஆண்டும் கொரோனா காலம் என்பதால் சிறப்பு விமானம் மூலம் பர்மாவிலிருந்து டின் வின் @ ஹூசைன் ,ஏ ஏ வின் @ நசீமா ,ஷேன் மயே வின் @ இஸ்மாயில் ஆகியோரால் 3அடி அகலம் 50அடி நீளம் கொண்ட பூரான் கொடி நாகூர் கொண்டு வரப்பட்டு நாகூர் ஆண்டவரின் பேரப்பிள்ளையான ஷாகுல் ஹமீது சாஹிப் அவர்களால் பாத்திஹா ஓத பட்டது , பின்னர் பர்மா வாழ் மக்களின் சார்பாக பெரிய மினோராவில் கொடி ஏற்றப்பட்டது, அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 4,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் இன்றிரவு நாகப்பட்டினத்திலிகுந்து துவங்கும். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றடையும். அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருக்கும் மக்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டுகளிப்பார்கள். சந்தனக்கூடு ஊர்வலமானது நாளை அதிகாலை 4 மணிக்கு நாகூரை சென்றடைகிறது. பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் தர்கா மஸ்தான் கலிபா சந்தனம் பூசுவார். இந்தப் புகழ் பெற்ற சந்தனம் பூசும் வைபவத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான ஜனங்கள் மட்டும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாரை தப்பட்டை பேண்டு வாத்தியங்கள் உடன் மக்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: ச.ராஜேஷ்