பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தலின் ஒரு பகுதியாக கிராம திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு முதல் நாள் பயிற்சி வகுப்பு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கிராம ஊராட்சி தலைவர் Rvs.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ரம்யா தமிழரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர், இப்பயிற்சி வகுப்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உதவி இயக்குனர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இப்பயிற்சி வகுப்பில் Institute of Grassroots Governance அமைப்பை சேர்ந்த பிரபாகரன் மற்றும் யோகவீ ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வகுப்பை கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட களப்பணியாளர் தினேஷ் குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகண்ணன் மற்றும் பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.
செய்தியாளர் :ச.ராஜேஷ்