க்ரைம்

வேளாங்கண்ணிக்கு வந்த திருநெல்வேலி பக்தர் இறப்பு, இறந்தவர் அடையாளம் தெரியாததால் ஐந்து நாட்களாக உடல் பிரேத கிடங்கில் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர், இந்த கொரோனா லாக்டவுன் முடிந்து ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கமாகிவிட்டது இந்நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார், மறுநாள் காலையில் இவர் தங்கியிருந்த ரூம் திறக்கப்படாததால் லாட்ஜ் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்து ரூமைக் உடைத்து பார்த்தபோது அங்கு தங்கியிருந்த நபர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவரை உடனடியாக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார், அவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக ஆகிவிட்ட காரணத்தினால் இரண்டு நாள் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவர் பெயர் ஞானப்பிரகாசம் என்றும், கன்னியாகுமரி மாவட்டம் திருநெல்வேலி திசயன்விலை மேல தெருவை சேர்ந்த தில்லையான் நாடார் என்பவரது மகன் ஞானப்பிரகாசம் என்று விடுதியில் விலாசம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் மேற்கண்ட இறந்த நபரின் விலாசம் சரியாக இல்லாததால் இவர் யாரென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத அறையில் பாதுகாத்து வைத்துள்ளனர். மேலும் இந்த நபர் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் 9498100934- 04365263100 மற்றும் 9498100905 என்ற காவல் நிலைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு வேளாங்கண்ணி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button