நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியில் மாவூரில் இருந்து சாட்டியக்குடி நெடுஞ்சாலை வாய்க்கால் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது, இந்த இடம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரதுறையில் இருப்பதால் கடந்த 17ஆம் தேதி அதிகாரிகளால் இருபத்தி ஒரு நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் திடீரென காலி செய்ய கூறிய அறிவிப்பினை பெற்ற கூலித் தொழிலாளிகள் தங்களது பிள்ளைகள் முதியவர்கள் இருக்க இடமின்றி இன்னல் பட்டு வருவதால் குடியிருக்க மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை வீடுகளை காலி செய்யும் அறிவிப்பு ஆணையை நிறுத்திவைக்க வேண்டுமென்று ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா தலைமையில் குடியிருப்பு பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்: ச.ராஜேஷ்