க்ரைம்

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி பஸ்கள் பறிமுதல் ; ரூ .1 லட்சம் அபராதம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

  நாகை மாவட்டத்தில் அனுமதிசீட்டு , தகுதிச்சான்று உள்ளிட்டவை இல்லாமலும் , அதிக நபர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார் . இதன் படி வட்டார போக்குவரத்து  அலுவலர் பழனிசாமி தலைமையில்  , மோட்டார் வாகன  ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட  அதிகாரிகள் மூன்று நாட்களாக  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் . இதில் ஏனங்குடி , திருமருகல் , திட்டச்சேரி , கருவேலங்கடை உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து அனுமதி சீட்டு , தகுதிச் சான்று  இன்றி இயக்கப்பட்ட  நான்கு பள்ளி பேருந்துகள்  அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உரிய ஆவணங்கள்  இன்றி இயக்கப்பட்ட 4 பஸ்க ளுக்கும் ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் உரிய ஆவணங்களின்றி இயக்கப்படும் பேருந்துகளில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றால் அபராதம் மட்டும் அல்லாமல் பள்ளி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்: ச. ராஜேஷ்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button