கேரளாவில் பலத்த மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மத்திய தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகியுள்ளதால் மாநிலம் முழுவதும் மிக பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பத்திணம்திட்டா உட்பட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது