செங்கோட்டை அருகில் உள்ள கற்குடி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் தென்னந்தோப்புகளில் இறங்கி பல விவசாயிகளின் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களை கடந்த ஒரு மாத காலமாக வேரோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்து வருகிறது.
இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை மரங்களை அழித்துள்ளது. நெல் விவசாயமும் இல்லாமல் வேதனையில் விவசாயிகள் கவலையடைந்துள்ள நேரத்தில் தென்னை மரங்களையும் இழந்து விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து வருகிறார்கள்.
வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் யானை தினந்தோறும் பல தென்னை மரங்களை நாசம் செய்து வருகிறது.
தென்னை மரங்களை இழந்த விவசாயிகள் தங்களுக்கு தமிழக அரசு ஒரு தென்னை மரத்திற்கு ஒரு தொகையை நிர்ணயம் செய்து மொத்த மரங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் வேதனையுடன் தெரிவித்தனர்.