ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை – ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.!
2017ம் ஆண்டு ஈரோடு அருகே R.N.புதூரில் பொது குழாயில் கை கால்களை கழுவியதால் தகராறு ஏற்பட்டது. அதில், கை கால்களை கழுவிய சித்துராஜ் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. ஒருவர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 5 பேருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது
R.N.புதூரை சேர்ந்த ரங்கநாதன், அவரது மனைவி சிவரஞ்சனி மற்றும் உறவினர்கள் பானுமதி, சித்ரா, சகுந்தலா ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது